» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளைநிலங்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

புதன் 30, நவம்பர் 2022 3:27:54 PM (IST)



கயத்தாறு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக் கோரி விவசாயிகள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளை நிலங்களை அழித்து நாசம் செய்யும் காட்டு பன்றிகளை பிடித்து, வனபகுதியில் விட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் சீனிப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார், கம்மாபட்டி, தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், ராஜா புதுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் தாசில்தார் சுப்புலெட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory