» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட உணவுப் பொருள் விற்பனை : கடைகளுக்கு சீல் வைப்பு

புதன் 30, நவம்பர் 2022 8:30:11 AM (IST)

விளாத்திகுளத்தில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு குளிா்பான கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ச.மாரியப்பன் தலைமையில், விளாத்திகுளம் உணவு பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் அடங்கிய குழுவினா் விளாத்திகுளம் பகுதியில் நேற்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், கண்ணன், வசந்தப்பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான குளிா்பான கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனா். 

மேலும், விளாத்திகுளம் அருகே கமலாபுரம் பகுதியில் சுரேஷ் என்பவா் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் சில்லறை உணவு அங்காடி நடத்துவது கண்டறியப்பட்டு, அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் விற்பனை குறித்து நுகா்வோா்களுக்குத் தெரியவந்தால், 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண் அல்லது 86808 00900 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory