» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ஆயுதப்படை அமைக்க பரிசீலனை: எஸ்பி தகவல்

புதன் 30, நவம்பர் 2022 7:53:32 AM (IST)



கோவில்பட்டியில் ஆயுதப்படை அமைப்பது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி பாலாஜிசரவணன் தெரிவித்தார்.

கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பாலாஜிசரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். சமீபத்தில் நடைபெற்ற யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாரின் குழந்தைகளை அவர் பாராட்டினார். பின்னர் அவர் கோவில்பட்டி நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதியில் புதிய போலீஸ் சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். 

பின்னர் எஸ்பி கூறியதாவது: இந்த சோதனை சாவடி 24 மணி நேரமும் செயல்படும். இதன் மூலம் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் குற்றவாளிகளை எளிதில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகன தணிக்கை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. கோவில்பட்டி போலீஸ் கோட்டத்தில் கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியில் ஆயுதப்படை அமைப்பது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த போலீஸ் கோட்டத்தில் எல்கை சீரமைப்பது தொடர்பாக வருவாய் துறையில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி நகரில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்களில் 70 சதவீதம் குற்றவாளிகளை கண்டுபிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளோம், என்றார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி டிஎஸ்பி  வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், மங்கையர்க்கரசி, பத்மாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கண்டிப்பாகDec 1, 2022 - 09:31:25 AM | Posted IP 162.1*****

அமைக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory