» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் வானவில் மன்றம் : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

திங்கள் 28, நவம்பர் 2022 4:46:25 PM (IST)



தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வானவில் மன்றம் என்னும் புதிய திட்டத்தை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் இன்று (28.11.2022) துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் சில பாடங்கள் மாணவர்களுக்கு புரியாது. மாணவர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இத்திட்டத்தில் பாடங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்படுகிறது. 

அப்போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதில் பதியும். மாணவர்கள் யூடியுப்பில் அறிவியல் சம்பந்தமான வீடியோக்களை பார்;த்து நிறைய சந்தேகங்களை பள்ளியில் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் எதைப்படித்தாலும் ஆர்வத்துடன் புரிந்து படிக்க வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் மூலம் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். அறிவியல், கணிதம், பொறியியல் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும். மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். 

தமிழ்நாடு முதலமைச்சர் , தரமான எதிர்கால சந்ததியினரை, தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வியிலும் பயில்வதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் உயர்கல்வி பயில்வதற்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நீங்கள் சிறந்த பொறியாளர்களாக, மருத்துவர்களாக, சான்றோர்களாக, தலைவர்களாக உருவாக கற்பதை குற்றமற கற்க வேண்டும். உங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள் என சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: மாணவர்கள் புத்தகத்தில் அறிவியல் படித்து வருகிறார்கள். ஆனால் செயல்முறையாக அது பற்றி தெரியாது. வானவில் மன்றம் மூலமாக புரிந்துகொள்வார்கள். ஆசிரியர்களிடம் பாடங்கள் தொடர்பாக எப்போதும் கேள்வி கேட்கக்கூடிய மாணவர்களாக இருந்தால்தான் சிறந்த மாணவர்களாக இருக்க முடியும். எந்த சாதியாக இருந்தாலும், எந்த வண்ணத்தில் இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தால் சாதிக்க முடியும். 

இந்த வானவில் மன்றம் திட்டத்தின் மூலமாக பாடங்களில் உள்ளவற்றை செயல்முறையாக செய்வதற்கு ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் கேட்க வேண்டும். ஆசிரியர்கள், தன்னார்வலர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கு செயல்முறையாக சொல்லிக்கொடுத்தால் நிறைய மாணவர்கள் அறிவியல் படிப்பார்கள். விஞ்ஞானியாக மாறுவார்கள். நமது பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரியில் அரசு பள்ளியில் படித்த சிவன் இஸ்ரோ தலைவர் ஆனார். 

மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகியவற்றை சிறப்பாக படித்தால் அவரைப்போல் விஞ்ஞானி ஆகலாம். வருங்காலத்தில் சிவந்தாகுளம் பள்ளி மாணவர்கள் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் செயற்கைக்கோள் வடிவமைத்துக்கொடுத்தார்கள் என்ற அளவுக்கு பெயர் பெற்று மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பெஜெகன், மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory