» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சி நிர்வாகத்தில் பஞ். தலைவியின் கணவர் தலையீடு : துணைத் தலைவர் புகார்!

திங்கள் 28, நவம்பர் 2022 11:35:51 AM (IST)



மணியாட்சி பஞ்சாயத்து நிர்வாகத்தில் பஞ். தலைவியின் கணவர் தலையீடு இருப்பதாக துணைத் தலைவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து மணியாட்சி ஊராட்சி மன்றம் துணைத் தலைவர் கருப்பம்மாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது: மணியாட்சி ஊராட்சி  பகுதிகளில் அடிப்படை வசதிகளான மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதுகுறித்து கேட்டதால் என்னை துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விடுவேன் என மிட்டுகிறார். மேலும், பஞ்சாயத்து தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தலைவர் போலவே செயல்படுகிறார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் வவுச்சரில் கையெழுத்து போடுமாறு மிரட்டுகிறார். பஞ்சாயத்து நிர்வாகத்தில் அவரது செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory