» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிறுத்தத்திற்கு பெயர் வைப்பதில் குழப்பம்: காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு புகார்

வெள்ளி 25, நவம்பர் 2022 3:57:29 PM (IST)

சாத்தான்குளம் அருகே பேருந்து நிலையத்திற்கு ஊர் பெயர் வைப்பதில்  நீதிமன்றம் உத்தரவை வருவாய் துறையோ, காவல் துறையோ செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கீழ்புறத்தில் கொழுந்தட்டு கிராமம். அமைந்துள்ளது. இதுபோல் தட்டார்மடம் சாலை மேல்புறத்தில் போலையார்புரம் அமைந்துள்ளது. இரு கிராமங்களிலும் சிஎஸ்.ஐ. மற்றும் ஆர்சி கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 6 ஆண்டுக்குமுன் போலையார் புரத்தில் பாழடைந்த இடத்தை சீரமைத்து பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது. பஸ் நிறுத்தத்திற்கு தங்கள் ஊர் பெயர் வைக்குமாறு இரு கிராம மக்களும் கூறியதால் அப்போதைய ஆட்சியர் பஸ் நிறுத்தத்திற்கு ஊர் பெயர் வைக்க தடை விதித்தார்.

இந்த பிரச்னையில் கொழுந்தட்டு பகுதியினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் சாஸ்தாவின்நல்லூர் என்ற பெயரை சூட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு முடிவடைய போகும் நிலையிலும் இதுவரை வருவாய்துறையோ, காவல் துறையோ குறிப்பிட்ட பேரை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்தடு இவ்வழக்கின் வாதிகளான கொழுந்தட்டு பகுதியினர் வருவாய் மற்றும் போலீஸ்துறையினர் மீது தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில் கொழுந்தட்டு ஆர்சி  தேவாலயத்தில் தற்போது திருவிழா நடந்துவருகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததால் திருவிழாவை முன்னிட்டு சாலையின் இருபுறமும் மின்விளக்கு அமைக்க காவல்துறை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இரவில் திருப்பலி சென்று வீடு திரும்பும் வழியில் பெண்கள், குழந்தைகளிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலஸ் கூறுகையில்,  "ரோட்டின் இருபுறத்தில் ஒரு பகுதி போலையார் புரமும் மற்றொரு பகுதி கொழுந்தட்டும் உள்ளது. ஆகவே போலையார்புரம் உள்ள ரோட்டுப்பகுதியில் மின்விளக்கு அமைக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகவே போலீஸ்தரப்பில் அனுமதி மறுத்துள்ளோம் என விளக்கமளித்துள்ளார். 

பஞ்சாயத்துக்கு சொந்தமான ரோட்டின் இருபுறமும் மின்விளக்கு அமைப்பதற்கு குறிப்பிட்ட பகுதியினர் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்? இரு ஊர்களுக்கும் ஏற்கனவே உள்ள முன்பகையை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி தற்போது திருவிழா நேரத்தில் சமூகவிரோத செயலை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாக கொழுந்தட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory