» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம் : ஆட்சியர் தகவல்

வெள்ளி 25, நவம்பர் 2022 12:27:34 PM (IST)

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வி. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 5413 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்று தற்போது 25.02.2023 அன்று நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்ற தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் 28.11.2022 அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப் படவுள்ளது. மாதிரி தேர்வின் விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தேர்வர்களுக்கு முறையான பின்னூட்டம் (FEEDBACK) வாரந்தோறும் தேர்வர்களுக்கு தரப்படும். 

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது TNPSC குரூப் 2 முதல்நிலை தேர்வின் HALL TICKET நகல், PASSPORT SIZE புகைப்படம் ஆகியவற்றுடன் 28.11.2022 அன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதே நாளில் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசுப் பணியில் பணிப்புரியும் அலுவலர்களால் முதன்மை தேர்வுக்கு தயாராகும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வாய்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory