» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் ஆய்வு

வெள்ளி 25, நவம்பர் 2022 12:09:00 PM (IST)கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் அரங்குகளை கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். 

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் அரங்குகளை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, கோவை வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.கீதாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory