» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவிகள் இருவர் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

வெள்ளி 25, நவம்பர் 2022 11:07:43 AM (IST)

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவிகள் இருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள  பண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் அச்சுதன் மகள் கார்த்திகா (19). இவர் சாத்தான்குளத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் செல்வம் மகள் ஹெப்சிபா (19), என்பவர் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் தோழிகள். 

இந்நிலையில், கடந்த 23ம் தேதி இருவரும் கல்லுரியில் இருந்து வங்கிக்குச் செல்வதாக கூறிச் சென்றனர். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

TAMILANNov 25, 2022 - 04:32:19 PM | Posted IP 162.1*****

தொலைக்காட்சியில் சீரியல் என்ற கேவலமான தொடர்களை பார்க்காதீர்கள். அதனால் நமது CULTURE கெட்டுவிடும் குடும்பத்தில் சண்டை வரும் .....ETC ETC

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory