» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்ஜிஆர் சிலையில் பெயர் பலகை அழிப்பு: ஓபிஎஸ் அணிக்கு இபிஎஸ் அணி நிர்வாகி கண்டனம்

வெள்ளி 25, நவம்பர் 2022 11:01:20 AM (IST)

தூத்துக்குடி கிப்சன்புரம் எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகையை அழித்தவர்களுக்கு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி. சாலை தொடர்ச்சி, கிப்சன்புரம் பகுதியில் உள்ள பூங்காவின் முன்பு சுமார் 20 ஆண்டுகளாக எம்ஜிஆர் ரசிகர்களால் எம்ஜிஆர் மார்பளவு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இதனை அதிமுக நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சிலையின் கீழ் பகுதியில் உள்ள பெயர் பலகையில் மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் அதிமுக 39வது வட்ட கழக செயலாளருமான பி.திருச்சிற்றம்பலம் என்பவர் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை எழுதினார். 

இதனை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சிலர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது "இங்குள்ள எம்ஜிஆர் சிலையை 20 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தைச் சார்ந்த மூத்த அதிமுக நிர்வாகி சாமுவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் நிறுவினர். மூத்த அ.தி.மு.க உறுப்பினர் சாமுவேல் நிதியுதவி அளிததார். அந்த சிலை இன்றளவும் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதில் உள்ள பெயர் பலகையில் நான் எழுதிய நிர்வாகிகளின் பெயரை ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகி எஸ்.ஏசாதுரை என்பவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது ஆதரவாளர்களைக் கொண்டு அழித்து உள்ளார். அதிமுகவை சார்ந்த நிர்வாகிகளான எங்கள் பெயரை எழுதியதை அழிக்க ஓபிஎஸ் அணியினருக்கு என்ன தகுதி உள்ளது. கிப்சன்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பூங்கா எங்கள் குடும்ப முன்னோர்களின் பூர்வீக நிலம். அதனை அந்த காலத்தில் எங்களது முன்னோர் ஐயா நல்லபெருமாள் பிள்ளை அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசிற்கு வழங்கினார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். 

அந்த இடத்தின் முகப்பில் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதையும் இந்த சிலையை பராமரிக்க முழு அதிகாரமும் உண்மையான அதிமுக நிர்வாகிகளான இந்த சிலையை நிறுவிய சாமுவேல் உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகளுக்கும் உள்ளதே தவிர அரசியல் சுயலாபத்திற்காக கட்சியை பிளவு படுத்த நினைக்கும் ஓபிஎஸ் போன்ற அவர் வழியில் இருக்கின்ற நிர்வாகிகள் யாருக்கும் இல்லை என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொண்டு பெயர் பலகையை அளித்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு அதிமுக நிர்வாகி திருச்சிற்றம்பலம் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory