» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து 10 பவுன் தங்க நகை திருட்டு - போலீஸ் விசாரணை!

வெள்ளி 25, நவம்பர் 2022 10:48:50 AM (IST)

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகி்னறனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் ராமநாதன் (61). இவர் நேற்று பிற்பகலில் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கினாராம். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து சூட்கேசில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாராம். இதன் மதிப்பு ரூ.2.5லட்சம். இதுகுறித்து ராமநாதன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory