» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் குதித்த வாலிபர் பரிதாப சாவு

வெள்ளி 25, நவம்பர் 2022 8:31:48 AM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்று பாலத்திலிருந்து குதித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சங்கர் (33). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிலிருந்து அவரது சகோதரர் கண்ணன் நெல்லையிலுள்ள மருத்துவமனைக்கு மோட்டார் பைக்கில் அழைத்து சென்று சென்று கொண்டிருந்தார். 

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் பைக்கை நிறுத்துமாறு கண்ணனிடம் கூறியுள்ளார். அவரும் பைக்கை நிறுத்தவே அதிலிருந்து இறங்கிய சங்கர் திடீரென ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிபரணி ஆற்றுக்குள் குதித்துவிட்டாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தீயணைப்புபடை வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றுக்குள் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் கிடந்த சங்கரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து வாலிபர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory