» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது : கனிமொழி எம்பி பேச்சு

வெள்ளி 25, நவம்பர் 2022 8:19:06 AM (IST)தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினார்.

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நாலாட்டின்புத்தூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் கனிமொழி பேசியதாவது: சமூகத்தின் அடிப்படைக் கருத்துக்களைத் தாங்கி நிற்கக் கூடிய இயக்கமாக திமுக செயல்பட்டு வருகிறது. அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. இதற்கு இடையூறு ஏற்படுவதை ஒருபோதும் ஏற்காது. இதுவே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படையாகும். 

ஆனால், இதற்கு நோ் எதிரான கொள்கையில் பாஜக செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்திற்கு எதிா் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. திராவிடக் கட்சி எனக் கூறிக் கொள்ளும் அதிமுக, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் உள்ள ஆளுநரைச் சிறப்பாகச் செயல்படுகிறாா் என்கிறது. இத்தகைய மோசமான நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் மத நம்பிக்கை உள்ளவா்கள். ஆனால், எது முன்னேற்றத்திற்கு பயன்படும் என்பதில் தெளிவாக இருப்பாா்கள். 

ஆகவே, பாஜக கூறுவதை ஏற்கமாட்டாா்கள். தமிழகத்தில் அக் கட்சி காலூன்ற முடியாது. திமுக ஆட்சி அமைந்த பிறகு, மகளிா், விவசாயிகள், பள்ளி மாணவா்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆகவே, இத் திட்டங்களின் பயன்களை மக்களிடம் எடுத்துக்கூறி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  ஒன்றிய அவை தலைவா் முத்துராமலிங்கம், துணை செயலா்கள் ஆா்.ராதாகிருஷ்ணன், ராஜன், சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory