» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 24, நவம்பர் 2022 8:58:23 PM (IST)

நாகலாபுரம் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை மிரட்டி நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி(29). இவர் தனது மகன் ரித்தீஷ்(7), ஒன்றரை வயது மகள் சாதனா ஆகியோர் கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு தூங்கச் சென்றனர். 

நள்ளிரவு நேரத்தில் சத்தம் கேட்டு ராமலட்சுமி விழித்தபோது, முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் பீரோவை உடைக்க முயற்சித்து கொண்டிருந்தனர். ராமலட்சுமியை பார்த்த அவர்கள், கத்தியை காண்பித்து மிரட்டி அவரிடமிருந்து 3.5 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அவர் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory