» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவரின் தொடர்பால் விபரீதம்: 1½ வயது குழந்தையை கொன்று இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

வியாழன் 24, நவம்பர் 2022 4:41:47 PM (IST)

நெல்லை தேவர்குளம் அருகே கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் 1½ வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(30). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகள் பிரவீனாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் அகிமா என்ற பெண் குழந்தை உள்ளது.

மகேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் பிரவீனாவும், அவரது குழந்தையும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். இதனை பார்த்த முத்துப்பாண்டி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தகவல் அறிந்த தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரவீனா, அவரது குழந்தை அகிமா ஆகியோரின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory