» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப் படகு மீனவர்கள் ஸ்ட்ரைக்

வியாழன் 24, நவம்பர் 2022 11:07:49 AM (IST)

தூத்துக்குடியில் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

தூத்துக்குடியில் புயல், மழை எச்சரிக்கை காரணமாக கடந்த 12 நாட்களுக்கு பின்னர் விசைப் படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு படகு உரிமையாளர் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மீனவர்கள்  கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் 250 படகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory