» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொற்கையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!

புதன் 23, நவம்பர் 2022 8:06:17 PM (IST)பாண்டியனின் தலைநகராக விளங்கிய கொற்கையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் கி.செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ளது கொற்கை. இந்த கொற்கை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனின் தலைநகராகவும், புகழ்பெற்ற துறைமுகபட்டிணமாகவும் விளங்கியுள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடந்துள்ளது. அரபு குதிரையை இறக்குமதி செய்தும், இங்கு விளையும் முத்துக்கள், மயில் தோகை உள்பட பல பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளனர். பெரிபுருஸ், தாலமி போன்றோர் இத்துறைமுகத்தினை போற்றி புகழ்ந்துள்ளனர்.

இந்த கொற்கை துறைமுகத்தினை டாக்டர் கால்டுவெல் ஆய்வு செய்து உலகிற்கு தெரிவித்தார். மேலை நாட்டு அறிஞர்கள் இங்கு கிடைத்த காசுகளை திருநெல்வேலி காசு என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளார். கொற்கையை தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி 1966&67 ல் ஆய்வு செய்தார். மேலும் கடந்த வருடம் இவ்விடத்தில் மாநில அரசு சார்பில் மாநில அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஆசைதம்பி, காளிஸ்வரன் கொண்ட குழுவினர் ஆயவு செய்தனர். தற்போது இதன் ஆய்வறிக்கை தயார் செய்ய இங்கு கிடைத்தபொருள்கள் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு தமிழக தொல்லியல் துறை சார்பில் கடல்சார் ஆய்வு தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல்வழியாக கடல்சார் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த  ஆய்வை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொற்கைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் கொற்கையில் உள்ள சுற்றுலா விளக்க கட்டிடத்தில் கடந்த வருடம் நடந்த அகழாய்வில் கிடைத்து பாதுகாப்பாக வைத்திருந்த அகழாய்வு பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து அருகில் இருந்த 20000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து வெற்றிவேல் செழியநங்கை கோயில் என்றழைக்கப்படும் கண்ணகி கோயில் மற்றும் கொற்கை குளத்தினை அவர் பார்வையிட்டார். அவருக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார். 

பின்னர் அக்கசாலை விநாயகர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டு, அங்குள்ள கல்வெட்டுகள் குறித்து கோவில் பூசாரியிடம் கேட்டறிந்தார். அதன்பின் அக்கா சாலை  என்று  அழைக்கப்படும் பாண்டிய மன்னரின் அச்சடிக்கும் இடத்தினை முறைப்படி அக்கசாலை என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரை சந்தித்த கொற்கை பஞ்சாயத்து தலைவர் முருகேசன், கவுன்சிலர் பாரத், வங்கி பணியாளர்கள், பெண்கள் அடங்கிய குழுவினர் கொற்கை கிராமத்துக்கு முறைப்படி வராத அரசு பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர்  வாக்களித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் கண்ணன்,  ஆறுமுகமுகமங்கலம், வருவாய் ஆய்வாளர் முத்துசரவணன்,   கொற்கை கிராம நிர்வாக அதிகாரி காளிராஜ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூகசேவகர் காமராஜ் காந்தி, பெருமாள் பட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory