» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

புதன் 23, நவம்பர் 2022 3:36:11 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை தாக்கி கம்மல், செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசம்மாள் (81). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ராசம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ராசம்மாளின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார். பின்னர் அவரின் காதை அறுத்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார். 

இந்நிலையில், இன்று காலை ராசம்மாள் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகை, செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital







Thoothukudi Business Directory