» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

புதன் 23, நவம்பர் 2022 12:16:38 PM (IST)

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் நியமனம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி தி.மு.க. மாநில இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக தூத்துக்குடி எஸ். ஜோயல், இராமநாதபுரம் ந.ரகுபதி (எ) இன்பா ஏ.என். ரகு, மற்றும் திருத்துறைப்பூண்டி  நா.இளையராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital







Thoothukudi Business Directory