» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை!

திங்கள் 21, நவம்பர் 2022 12:37:32 PM (IST)தூத்துக்குடியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளை உடனடியாக முடித்து பாலத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தூத்துக்குடி ஒன்றியக்குழு சார்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு புதுக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பொருட்டு நிறுவப்பட்டு வரும் மேம்பால பணிகள் துவக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த பின்பும் பாலப்பணி நிறைவடையாமல் தொடர்கிறது.  இந்த பாலப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மெயின் ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. 

சர்வீஸ் சாலைகள் இரண்டும் சல்லி மண் மட்டும் வைத்து மண் ரோட்டின் மீது அனைத்து வாகனங்களும் செல்வதால் கடுமையான தூசி தாக்குதலால் மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.  அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிர்பலிகளும், பொருட் சேதங்களும் எற்பட்டு வருகிறது. மேலும் சமதளமற்ற மண்சாலையில் பயணிப்பதால் பாதுகாப்பற்ற பயணத்துடன், நேரமும் விரயமாகிறது. இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்பும் பாலப்பணியை விரைந்து முடிக்கவோ சர்வீஸ் சாலைகளை செப்பனிடவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. 

மேலும் இந்த பாலப்பணிகள் நடைபெறுவதால், புதுக்கோட்டையில் இருந்து கீழக் கூட்டுடன்காடு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு மக்கள் 2 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இறந்தவர்கள் சடலத்தை எடுத்து செல்வதில் இரண்டு சமூகங்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளை உடனடியாக முடித்து பாலத்தை திறக்க வேண்டும்.  சர்வீஸ் சாலைகளை பழுது பார்த்து தரமான தார் சாலைகளாக மாற்ற வேண்டும். பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் மின்விளக்குகள் அமைத்து சாலை, பால பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். கீழ கூட்டுடனகாடு சாலையை புதக்கோட்டை பழைய போலீஸ் ஸ்டேசன் சாலையுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

kumarNov 21, 2022 - 03:57:24 PM | Posted IP 162.1*****

pora pokka patha neengale antha rendu samoogathirku idaye sandayai kilappivituriveengapola?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory