» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எனது தந்தை பெயரில் விருது, ஊக்கத்தொகை வழங்கப்படும்: மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!

சனி 19, நவம்பர் 2022 4:28:24 PM (IST)



வரும் கல்வியாண்டு முதல் எனது தந்தை பெயரில் விருது, ஊக்கத்தொகை வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சியை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை போல் முதலமைச்சர் ஸ்டாலின் பல உதவிகளை சமூகநலத்துறை மூலம் செய்து கொடுக்கப்படுகிறது. அத்துறையின் அமைச்சராக கீதாஜீவன் பணியாற்றி வருகிறார். நல்லமுறையில் அனைவரும் படிக்க வேண்டும். அதற்கு அரசும் முதலமைச்சரும் உதவி செய்வார்கள்.  எல்லோரிடமும் ஒவ்வொரு திறமைகள் உண்டு அதுபோல் உங்களிடமும் உண்டு. சில குறைபாடுகள் தெரிவிப்பதற்கு 1098 எண் உள்ளது. 

மக்கள் பணி ஆற்றுவதற்கு என்று நாங்களும் இருக்கிறோம். உங்களுக்கு தேவையான சேவைகளை செய்து கொடுப்போம். இந்த இல்லங்களில் உள்ள குழந்தைகள் அரசு தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் நினைவு பரிசும் ஊக்கத் தொகையும் மறைந்த எனது தந்தை பெரியசாமி பெயரில் வழங்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் நினைவு பரிசும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். திறமையை வளர்த்து கொண்டு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

விழாவில் குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் வக்கீல் அரசகுமார், பிரகாஷ், சித்திரம்ஜான், டார்லிங் பக்கிள், தங்கம், பியூலா, இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர் டயானா, நன்னடத்தை அலுவலர் முருகன், மாநில திமுக  மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ் மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச்செயலாளர் டென்சிங், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ராபர்ட், ஜோஸ்பர் உள்பட இல்லங்களின் காப்பளார்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர். சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து

P.S. RajNov 19, 2022 - 11:08:29 PM | Posted IP 162.1*****

மாணவ-மாணவியருக்கான கல்வி ஊக்கத் தொகையை பெருந்தலைவர் காமராஜர் பெயரில் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களின் கல்விக் கண் திறந்தவர் காமராஜர் ஒருவரே ! அவர் பெயரில் விருது வழங்குவது தான் சிறப்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!

புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory