» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்நடை சார்ந்த தொழில்கள் தொடங்க நிதி வசதி : விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 6, அக்டோபர் 2022 12:22:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சார்ந்த தொழில்கள் தொடங்க, மத்திய அரசின் நிதியுதவி பெறத் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பால் இறைச்சி கால்நடை தீவனம் மற்றும் கால்நடை தடுப்பூசி/மருந்துகள் உற்பத்தி செய்யும் மற்றும் பதப்படுத்தும் அலகுகள் புதிதாக உருவாக்க மற்றும் மேம்படுத்த ரூ.15,000/- கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற தகுதியுள்ளவாகள் தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், MSME  நிறுவனங்கள், பிரிவு  8 நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் (FPO) ஆகும்

இத்திட்டத்தின் கீழ் (i) பால் பொருட்கள் பதப்படுத்துதல் (ii) இறைச்சி பதப்படுத்துதல் (iii) கால்நடை தீவன உற்பத்தி அலகுகள் (iv) கால்நடை இன அபிவிருத்தி மற்றும் பெருக்க அலகுகள் (v) கால்நடை கழிவு மேலண்மை அலகுகள் (vi) கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து உற்பத்திகள் அலகுகள் அமைக்க 90% வரை வங்கிக்ககடன் பெற வசதிகள் உள்ளன. இவ்வாறு வங்கிகள் மூலம் திட்டம் செயலாக்கத்திற்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையில் 3% கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தனிநபர் தொழில் முனைவோர் MSME நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து விண்ணப்பிக்க கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் உதவிகள் செய்து தரப்படும் எனவே தகுதியான நபர்கள்/நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கால்நடை பராமரிப்புத்துறையை அணுகி விபரம் அளித்து விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SundarOct 6, 2022 - 01:11:20 PM | Posted IP 162.1*****

How to apply

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory