» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தங்கத்தேர் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது!

திங்கள் 3, அக்டோபர் 2022 8:28:42 AM (IST)

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத்தேர் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 02.02.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300- வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. 

இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு (2023) தங்கத் தேர் பவனி நடைபெறும் என்று பிஷப் ஸ்டீபன் அந்தோணி அறிவித்தார். இதனை தொடர்ந்து தங்கத் தேர் வடிவமைப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. தங்கத்தேர் வடிவமைக்கும் பணிக்காக பேராலய வளாகத்தில் பிரமாண்டான ஷெட் அமைக்கும் பணி நடக்கிறது. 

இதற்காக பனைமரங்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் நடப்பட்டன. இந்தஷெட் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும். தேர்கூடத்தில் இருந்து தேர் வெளியே எடுத்துவரப்பட்டு இந்த ஷெட்டில் நிறுத்தி தேர் வடிவமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்படும். இந்த பணிகள் முடிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

SURESHOct 8, 2022 - 01:02:08 PM | Posted IP 162.1*****

AVE MARIA

அன்புOct 4, 2022 - 10:36:15 AM | Posted IP 162.1*****

மரியே வாழ்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory