» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதைப்பொருள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் அளிக்க செல்போன் எண்கள் : எஸ்பி அறிவிப்பு

வெள்ளி 30, செப்டம்பர் 2022 3:16:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க காவல்துறை சார்பில் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதே காவல் துறையின் நோக்கமாகும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் காவல்துறைக்கு தேவைப்படுகிறது. 

ஆகவே பொதுமக்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுணர்வுடன் தங்கள் பகுதிகளிலோ, பள்ளி மற்றும் கல்லூரி அருகிலோ, கடைகள் போன்ற பொது இடங்களிலோ கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற தகவல் தெரிந்தால் செல்போன் எண்கள் 83000 14567 மற்றும் 95141 44100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலாகவோ அல்லது வாட்ஸ் தகவலாகவோ 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் எனவும், குறிப்பாக அவ்வாறு தகவல் தருபவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

billaOct 1, 2022 - 06:56:21 PM | Posted IP 162.1*****

offline status view is the best way to pass informations......TN 72 AL XXXX

அன்புSep 30, 2022 - 07:52:34 PM | Posted IP 162.1*****

பூங்காக்களில் கஞ்சா அடிக்கிறவனை போன்போட்டா தூக்கமாட்டீங்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory