» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென்காசி அருகே அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல்: போலீசார் விசாரணை!

வியாழன் 29, செப்டம்பர் 2022 12:34:18 PM (IST)

தமிழக எல்லை அருகே கேரளாவில் ஆவணங்களின்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை புளியரை அருகே கேரள மாநில ஆரியங்காவு சோதனை சாவடி உள்ளது. தற்போது அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை அதிகப்படுத்தியுள்ள நிலையில், ஆரியங்காவு செக் போஸ்டில் ஆவணங்களின்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு பஸ் புறப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து கேரள முதல் சோதனை சாவடியான ஆரியங்காவு செக் போஸ்ட்டில் இந்த அரசு பஸ்சை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கடையநல்லூரைச் சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் வைத்திருந்த பையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.28 லட்சம் வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. அதை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரளாவிற்கு தங்கம் வாங்குவதற்கு செல்வதாக முகமது அக்ரம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பணத்தை சுங்கத் துறையினர் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தற்போது பணத்தை பறிமுதல் செய்து தென்மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory