» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை தசரா திருவிழா 4-ம் நாள்: மயில் வாகனத்தில் அன்னை முத்தாரம்மன் தரிசனம்!

வியாழன் 29, செப்டம்பர் 2022 12:09:54 PM (IST)

குலசேகரன்பட்டினத்தில் இன்று 4-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் இன்று இரவு மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் தசரா பெருந்திருவிழாவில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். 

திருவிழாவின் 4-ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் போலீசார் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory