» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு: மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!

வியாழன் 29, செப்டம்பர் 2022 11:02:42 AM (IST)



மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி மற்றம் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், மந்திர மூர்த்தி, ஜெயலட்சுமி, பத்மாவதி ஜெயராணி ஆகிய  5பேரும் "ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக் கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்" என்று கோஷம் எழுப்பியவாறு அவையை விட்டு வெளியேறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் "வெளியே போ வெளியே போ" என்று என்று கூச்சலிட்டனர். 



இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். இதை வன்மையாக மாமன்றம் கண்டிக்கிறது. அவர்களுக்கு மக்கள் பிரச்சனையில் அக்கறை இல்லை. இது வேதனை அளிக்கிறது என்று கூறினார். இதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory