» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் நியமனம் : திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

வியாழன் 29, செப்டம்பர் 2022 10:24:06 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.  மாவட்டச் செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவராக ஜா.செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளராக கீதாஜீவன், துணைச்செயலாளர் (பொது) ஜே. ராஜ்மோகன் செல்வின், துணைச் செயலாளராக (ஆதிதிராவிடர்) மா.ஆறுமுகம், துணைச் செயலாளர் (மகளிர்) டி.ஏஞ்சலா,பொருளாளராக சுசீ.ரவீந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ வி.மார்க்கண்டேயன், மற்றும் என்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாகவும், ஜெ ஜான் அலெக்சாண்டர், சோ. ராஜாக்கண்ணு, சே. பீட்டர், ரா.ராமர், சி.சிவசுப்பிரமணியன், அ.முத்துலட்சுமி ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஒன்றிய கழக செயலாளர் விபரம்:

விளாத்திகுளம் கிழக்கு சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு அன்பு ராஜன்,விளாத்திகுளம் மத்திய ரா. ராமசுப்பு, புதூர் கிழக்கு மு.செல்வராஜ், புதூர் மேற்கு இரா.மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு நவநீதகண்ணன், கோவில்பட்டி மத்திய முருகேசன், கோவில்பட்டி மேற்கு கி.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு வே. காசி விஸ்வநாதன், கயத்தாறு கிழக்கு சின்னப்பாண்டியன், கயத்தாறு மத்திய கி.கருப்பசாமி, கயத்தார் மேற்கு அ.சுப்பிரமணியன், நகரக் கழகச் செயலாளர் கோவில்பட்டி கா. கருணாநிதி,

பேரூர் கழக செயலாளர் விபரம்:

விளாத்திகுளம் இரா. வேலுச்சாமி, புதூர் மருது பாண்டியன், எட்டையாபுரம் ஆ. பாரதி கணேசன், கடம்பூர் மா.பாலகுமார், கயத்தாறு வி சுரேஷ் கண்ணன், கழுகுமலை ரா.கிருஷ்ணகுமார், தூத்துக்குடி மாநகர அவைத்தலைவராக கோ.ஏசுதாஸ், நகர செயலாளராக எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் (பொது) மா.முருகேசன், துணை செயலாளர் (ஆதிதிராவிடர்) எஸ்.பி.கனகராஜ், துணைச் செயலாளர் (மகளிர்) ஆர்.பிரமிளா, பொருளாளர் ஏசி.அனந்தையா,

பகுதி கழகச் செயலாளர்கள் விபரம்:

போல்பேட்டை – ஜி.ஜெயக்குமார், திரேஸ்புரம் – தொ.நிர்மல்ராஜ், சண்முகபுரம்- சுரேஷ்குமார், அண்ணாநகர்- து.அ. ரவிந்திரன் ஆகியோர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory