» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய திட்டங்கள்: 30ம் தேதி மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

புதன் 28, செப்டம்பர் 2022 5:09:52 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வருகிற 30ம் தேதி பல்வேறு திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைக்கிறார்.

நாளை மறுநாள் காலை விமானம் மூலம் வருகை தரும் அவர் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலையான தீயணைப்பு கருவிகள், நிலக்கரி தளம்,  இ-கார் சேவைகள், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, மின் போக்குவரத்து திட்ட மேம்பாடு, 140 கிலோ சூரிய மெயின் திட்டம், ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆயுஷ் பிரிவு உள்ளிட்ட திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

மேலும், தூத்துக்குடி கடலோர விரைவான வேலை வாய்ப்பு திட்டம், இரண்டு மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், 400 கிலோ வாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து வ.உ. சிதம்பரனார் நினைவு அருங்காட்சியகம், மற்றும்வ.உ. தகவல் மையம் ஆகியவற்றை பார்வையிடுகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory