» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனையில் உறவினரை தாக்கியவர் கைது

புதன் 28, செப்டம்பர் 2022 3:40:07 PM (IST)

எப்போதும்வென்றான் அருகே குடும்ப பிரச்சனையில் உறவினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகேயுள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்த செல்லகிருஷ்ணன் மகன் சிவக்குமார் (24) என்பவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த உடையார் மகன் சுடலை (40) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று சிவக்குமார் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுடலை அவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து எதிரி சுடலையை கைது செய்தார். அவர் மீது ஏற்கனவே எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

sddssSep 28, 2022 - 11:51:18 PM | Posted IP 162.1*****

4 valakku iruntha yen velila vidrunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory