» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது !

புதன் 28, செப்டம்பர் 2022 10:34:47 AM (IST)

தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராதாகிருஷ்ணன் (41), தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்ட்டாக வேலைபார்த்து வருகிறார். இவர் இந்திரா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடன் தவனையை வசூல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிச்சையா மகன் ஸ்டாலின் (22) என்பவர் அந்த பெண்ணிற்கு ஆதரவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மீனவர் காலனி பகுதியில் ராதாகிருஷ்ணன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஸ்டாலின் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில் காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory