» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நள்ளிரவில் பஸ்சை வழிமறித்து தகராறு: 2பேர் கைது!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 11:53:54 AM (IST)

சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் மதுபோதையில் பஸ்சை வழிமறித்து தகராறு செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புளியங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று நெல்லையில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை 2 மர்ம நபர்கள் மதுபோதையில் வழிமறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பேருந்தின் ஓட்டுனரான நெல்லை சாந்திநகர் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்லையா மகன் ஜான் இன்பராஜ் (59) அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கருங்கடல் மேல பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த சூசை மகன் ராஜா சிங் (38) மற்றும் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த காந்திராஜ் மகன் துரைசிங் (46) ஆகிய இருவரும் மதுபோதையில் மேற்படி அரசு பேருந்தை வழிமறித்து தகராறு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ரத்தினராஜ் மற்றும் போலீசார் மேற்படி ராஜா சிங் மற்றும் துரைசிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ராஜா சிங் மீது ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory