» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவி தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 11:49:41 AM (IST)

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் செல்வி அனுஜா கிருஷ்ணா (15), தூத்துக்குடி மில்லர் புரத்தில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென வீட்டின் பாத்ரூமுக்கு சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அவர் தந்தை ஜெயக்குமார் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

SIVASep 27, 2022 - 04:37:42 PM | Posted IP 162.1*****

RIP

selviSep 27, 2022 - 04:37:26 PM | Posted IP 162.1*****

RIP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory