» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அவுட்சோர்சிங் முறையை கைவிட வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 7:59:38 AM (IST)

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மின்வாரிய உத்தரவு எண் இரண்டை ரத்து செய்ய வேண்டும், பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய பொறியாளர் மற்றும் பணியாளர் சங்கங்கள் சார்பில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. மின்ஊழியர் மத்திய அமைப்பு மரியதாஸ் தலைமை தாங்கினார். 

போராட்டத்தில்,  மின்சார வாரியத்தில் உள்ள 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோன்று தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு அனைத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அண்ணா மின்ஊழியர் தொழிற்சங்க செயலாளர் அய்யாச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் அனல்மின்நிலைய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory