» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பா.ஜ.க. நிர்வாகி ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 26, செப்டம்பர் 2022 8:37:45 AM (IST)தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான பேருந்தை நோக்கி பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேருந்து நகர்ந்ததால் பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்தது. இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஏராளமான ஆம்னி பேருந்துகள் உள்ளன. இதில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக கோவைக்கு புறப்படுவதற்காக நேற்று இரவு 10 மணி அளவில் ஒரு பேருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தயாராக நின்றது. 

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தில் இருந்து பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பேருந்து புறப்பட்டு சென்றதால் பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பற்றியது. பேருந்துக்கு எந்தவித சேதமும் ஏற்படாதால் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதில் இருந்த 30 பயணிகளும் பத்திரமாக கோவை புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளர் விவேகம் ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து டவுன் டிஎஸ்பி சத்யராஜ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தை நெல்லை சரக காவல் துணை தலைவர் பிரவேஸ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 26, 2022 - 05:14:13 PM | Posted IP 162.1*****

விவேகம் உரிமையாளர்கள் எப்பேர்பட்டவர்கள் என்பது பலருக்கும் நன்கு தெரியும். அவர்கள் சினிமா படமெடுத்த கதை. ஒரு வழக்கிற்காக ஆற்காடு வீராசாமியிடம் சரணடைந்த கதை. இன்று இந்த கட்சியில் இருப்பதே ஒரு மெகா கதை தானே. இதுவும் ஒரு கதைதானே

kumarSep 26, 2022 - 01:13:02 PM | Posted IP 162.1*****

kavalthurayinar kundu veesiya kayavargalai kaithu seythu thesiya pathukappu sattathil sirayil adaikkavendum.

PODHU JANAMSep 26, 2022 - 10:23:57 AM | Posted IP 162.1*****

Gundassla pidichchi veliye varathapadi kalai udaichi ulla podanum vanmurai naaikalai.

NameSep 26, 2022 - 09:54:55 AM | Posted IP 162.1*****

Yethu paparapu pathattama aahaaan

தமிழ்ச்செல்வன்Sep 26, 2022 - 09:39:50 AM | Posted IP 162.1*****

ஒரு பெர்மிட் எடுத்து அதில் 4 பஸ்ஸை ஓட்டி அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றும் நல்ல உத்தமர். நன்றாக விசாரித்து பார்த்தால் அவரேதான் ஆட்களை செட் அப் செய்திருப்பார்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory