» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மலேசியாவில் இருந்து கடத்திய ரூ.1¾ கோடி போதைப் பொருள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 24, செப்டம்பர் 2022 3:35:16 PM (IST)

தூத்துக்குடியில் மலேசியாவில் இருந்து கப்பலில் கடத்திவந்த ரூ.1¾ கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. 

தூத்துக்குடியில் இருந்து போதைப்பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் 10 டன் எடையிலான ரூ.1.75 கோடி மதிப்பிலான பாப்பி சீட் எனும் போதைப்பொருள் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போதை பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது? இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தூத்துக்குடி மற்றும் மதுரையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து

dgrgerSep 24, 2022 - 03:51:21 PM | Posted IP 162.1*****

poppy seeds bothai porula?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory