» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து பொருட்களை சூறையாடி தாய், மகளை தாக்கிய காவலர் கைது - எஸ்பி அதிரடி..!

செவ்வாய் 6, செப்டம்பர் 2022 11:47:07 AM (IST)

தூத்துக்குடியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாய், மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த பெருமாள் மகன் மாகாளி ராஜா (27)  என்பவருக்கும், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணியை சேர்ந்த காசிவிஸ்வநாதன் மனைவி ஷோபனா (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஷோபனா மாகாளி ராஜாவிடம் வாங்கிய பணத்தை நேற்று (04.09.2022) திருப்பி  தருவதாக கூறியிருந்திருக்கிறார், ஆனால் அதன்படி அவரால் பணம் திருப்பி கொடுக்க முடியவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த மேற்படி மாகாளி ராஜா, அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து விட்டிலிருந்த டி.வி, பிரிடஜ் ஆகியவற்றை சேதப்படுத்தி ஷோபனாவையும், அவரது மகளையும் கையால் அடித்து, அவதூறான வார்த்தைகளில் பேசி கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மேற்படி ஷோபனா ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்று (05.09.2022) புகார் அளித்துள்ளார். 

இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் குற்ற செயலில் ஈடுபட்டவர் ஆயுதப்படை காவலராக இருந்தபோதிலும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் மேற்படி ஆயுதப்படை காவலரை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்குமாறு திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்ஆவுடையப்பன் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் மேற்படி ஆயுதப்படை காவலர் மாகாளி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையிலடைத்தனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory