» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வர் ஸ்டாலின் 7ம் தேதி தூத்துக்குடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐஜி அஸ்ரா கார்க் ஆய்வு
திங்கள் 5, செப்டம்பர் 2022 5:43:16 PM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ம் தேதி தூத்துக்குடி வரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார்.
வருகின்ற 07.09.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தென்மண்டல காவல்துறை தலைவர்அஸ்ரா கார்க் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விமான நிலையத்தின் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய சாலைகள் போன்றவற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், விமான நிலைய காவல் ஆய்வாளர் உமாதேவி, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி 24வது வார்டு தார் சாலை எங்கே? அமமுக கேள்வி!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:20:22 PM (IST)

கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும் : அமைச்சர் பி.கீதாஜீவன்
திங்கள் 2, அக்டோபர் 2023 4:56:15 PM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் ஒருவர் திடீர் மரணம்!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:19:48 PM (IST)

வானிலை மையம் எச்சரிக்கை : தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
திங்கள் 2, அக்டோபர் 2023 4:10:37 PM (IST)

திமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்: எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைந்தனர்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:46:27 PM (IST)

கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்!
திங்கள் 2, அக்டோபர் 2023 3:34:48 PM (IST)
