» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ குட்கா பறிமுதல் : தூத்துக்குடியில் 3பேர் சிக்கினர்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:16:39 PM (IST)

தூத்துக்குடியில் லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், முத்தையா புரத்தில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து லோடு ஆட்டோவை ஓட்டிவந்த ஏரலை சேர்ந்த ராஜா, ஆறுமுகநேரியை சேர்ந்த சாந்தகுகுமார், மூலக்கரையை சேர்ந்த இசக்கிராஜா ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இவர்கள் எங்கிருந்து வாங்கி வந்தார்கள்? யாருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory