» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)
நடுவக்குறிச்சி துனை மின்நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.161.38 கோடியில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி துனைமின் நிலையத்தில் ரூ.1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த புதிய மின்மாற்றி, பவர் டிரான்ஸ்பார்மர், மற்றும் கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்..
இதையொட்டி நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற்ற விழாவில் துணை மின் பொறியாளர் ராஜேஷ், தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங், திமுக ஒன்றிய பொருளாளர் ஆனந்த், தாமரைமொழி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, மின்வாரிய ஊழியர்கள் மற்றும், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.