» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி  தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சாதியினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தூத்துக்குடி தலைமைத் தபால் அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் மாரி செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரோபி பிரபாகரன், இளைஞர் அணி தலைவர் ராஜா, மகளிர் அணி ஜெரினா பானு, தொழிற்சங்க அணி பால்ராஜ், வணிகர் அணி ஷேக் முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.


மக்கள் கருத்து

ஆனந்தன்Aug 16, 2022 - 09:46:47 PM | Posted IP 162.1*****

அடிக்கடி முடிவுகள் மாற்றப்படும் சரியா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory