» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சினிமா சண்டை பயிற்சியாளர், இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணியின் சார்பாக தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிபு தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் ராகவேந்திரா, சரவணகுமார்,  நாராயண ராஜ், பலவேசம், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

mutta pasangaAug 17, 2022 - 10:11:36 AM | Posted IP 162.1*****

avan thaan sinima karan. vera velai illamal bjp la sernthuttan. unakku vera velai illai yaa daaa.

OOPSAug 16, 2022 - 01:06:12 PM | Posted IP 162.1*****

உங்களுக்கு அறிவே இல்லையா? உன்னை அடிமையா வைத்திருந்த, தன்னை மேல் ஜாதி என்று எண்ணினவர்களுக்கு எதிராக போராடிய தந்தை பெரியார் உனக்கு எதிரியா? மீண்டும் அடிமையாய் வாழ விரும்புகிறாயா? சற்று சிந்தியுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory