» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைநீர் வடிகால் பணி: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 3:11:42 PM (IST)



தூத்துக்குடியில் மழைக்காலத்தில் காலங்காலமாக தண்ணீர் தேங்கும் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி 40 ஆவது வார்டு, கிளியோபட்ரா தியேட்டர் அருகில் உள்ள சந்தில் மழைநீர் வடிகால் ஓடை அடைப்பு ஏற்பட்டு காலங்காலமாக தண்ணீர் கட்டுவதால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையிைல், அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரடியாக அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். உடனடியாக புதிய வடிகால் வடிகால் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். ஆய்வின்போது, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வட்டச்செயலாளர் டென்சிங், மகளிரணி பெல்லா, தொமுச மரியதாஸ் மற்றும் திமுகவினர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory