» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 5:08:56 PM (IST)தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதிகை புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்க்கான சாரல் திருவிழா இன்று துவங்கியது. விழாவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நாய் கண்காட்சி, மலர் கண்காட்சி, அரிய வகை பழங்கள் கண்காட்சி, கார் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக குற்றாலம் சாரல் திருவிழாவோடு பொதிகை புத்தகத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது. 

புத்தகத் திருவிழா தொடர்ந்து வரும் 14ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா நிகழ்ச்சி  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்  மற்றும் பள்ளி மாணவர்களுடைய வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட அறிவியல் இயக்கம், மாவட்ட நூலகம் சார்பில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி.மிராக்லின் பால் சுசி வரவேற்புரையாற்றினார். 

சங்கரன்கோயில் கோட்டhட்சித் தலைவர் சுப்புலட்சுமி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாசிப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, ஆக்ஸ்போர்ட் பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், நூலகர் சுந்தர், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிகளை இலஞ்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் குமார் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரசா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory