» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனமழையில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம் : நிவாரண உதவி வழங்கல்!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 5:01:49 PM (IST)செய்துங்கநல்லூரில் கனமழையினால் வீடு இடிந்து காயம் அடைந்த மூதாட்டிக்கு ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், செய்துங்கநல்லூர் முஸ்லிம் புது தெருவில் கேத்திர பாலன்மனைவி மீனாட்சி என்ற மூதாட்டி மட்டப்பா வீட்டில் வசித்து வருகிறார். செய்துங்கநல்லூர் பகுதியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. அதிகாலை 3.20 மணியளவில், மீனாட்சியின் மட்டப்பா வீடு சேதமடைந்துள்ளது. சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த மீனாட்சியின் தலைமேல் விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், திருவைகுண்டம் வட்டாட்சியரை தொடர்பு கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண உதவி திட்டத்தின் கீழ் நிவாரண உதவித்தொகை மற்றும் தனது சார்பாக மூதாட்டிக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கிடுமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில், மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண உதவி திட்டத்தின் கீழ் ரூ.5ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை திருவைகுண்டம் வட்டாட்சியர் இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory