» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2023ல் பனிமய மாதா தங்கத் தேர் பவனி : மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 4:05:27 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அடுத்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடைபெறும் என மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 440-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு வழக்கம் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆன்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. 9 மணிக்கு அன்னையின் திருஉருவ பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் இன்று அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியை தொடர்ந்து 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. இந்த கூட்டுத் திருப்பலியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன், தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அடுத்த அண்டு (2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என அறிவிப்பை அவர் வெளியிட்டார். திருப்பலியில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருஉருவ சப்பர பவனி நடக்கிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பனிமய மாதா நகரில் உள்ள முக்கிய வீதிகளில் பவனியாக வருவார். இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு மரிய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். விழாவை முன்னிட்டு இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேராலயம் சுற்றிலும் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் பனிமய மாதா திருவிழாவில் கடந்த 2013ம் ஆண்டு தங்கத் தேர் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 16வது முறையாக தேர் திருவிழா நடைபெற உள்ளது என குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெறும் தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் ஏசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:24:37 PM (IST)

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ குட்கா பறிமுதல் : தூத்துக்குடியில் 3பேர் சிக்கினர்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:16:39 PM (IST)

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)

PSCCAug 5, 2022 - 04:18:46 PM | Posted IP 162.1*****