» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது : இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 3:46:47 PM (IST)

குரும்பூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 37 மதுபாட்டில்கள், மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று குரும்பூர் யோகரத்தினம் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் நாசரேத் நல்லான்விளை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் வேல்குமார் (49) மற்றும் நாலுமாவடியை சேர்ந்த ராமசுந்தரம் மகன் பொன்ராஜ் (51) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 37 மதுபாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,950, மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory