» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க.வில் இணைந்தார்

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 3:12:11 PM (IST)திருச்செந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக வேட்பாளரான கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராக இருந்து வந்தார். கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 63 ஆயிரத்து 11 வாக்குகளை பெற்ற போதிலும் இவர் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்து கட்சியின் தலைமையால் விடுவிக்கப்பட்டார். இதன் பின் அவர் வேறு கட்சிக்கு மாறப் போவதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் தற்போது தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவரான அண்ணாமலையை சந்தித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார். 

மேலும் அவர் மத்திய இணை அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அ.தி.மு.கவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்த கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணன் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளது தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

IndianAug 5, 2022 - 06:45:52 PM | Posted IP 162.1*****

Good decision

TUTY MAKKALAug 5, 2022 - 03:49:37 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள். good decision

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory