» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான இன்ஜினியர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 11:56:40 AM (IST)

ஆன்லைன் மூலம் ரூ.100 கோடி மோசடி செய்த புகாரில் கைதான குமரியை சேர்ந்த இன்ஜினியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடன் வழங்குதல், பாிசு பொருட்கள் வழங்குதல், வேலை வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட வகைகளில் ஆன்லைன் மோசடியை கும்பலாக செயல்பட்டு அரங்கேற்றி வருகிறார்கள். இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். 

மேலும் இத்தகைய ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பலர் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளன. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசாரும் துரித நடவடிக்கை எடுப்பதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இத்தகைய மோசடிகள் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில் மலேசியா நாட்டை தலைமையிடமாக கொண்டு மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் தலைமையில் ஒரு கும்பல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை என ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளார்கள். இதற்கு விண்ணப்பித்த ஏராளமானோரிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அந்த கும்பல் ஏராளமாக செல்போன் சிம்கார்டு எண்களையும் உபயோகித்துள்ளனர். 

இந்த மோசடியில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இன்ஜினியர் பிரின்ஸ் ஜெரோம் (30) என்பவருக்கு தொடர்பு இருப்பதை மும்பை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் பிரின்ஸ் ஜெரோம் சொந்த ஊரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மும்பை சைபர் கிரைம் போலீசார் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்கள் பூதப்பாண்டி போலீசாரின் உதவியுடன் வீட்டில் வைத்து பிரின்ஸ் ஜெரோமை கைது செய்தனர்.

பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிரின்ஸ் ஜெரோமிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory