» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குற்றால அருவிகளில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 11:30:26 AM (IST)

குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் ஜூன் மாதம் துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாக ஒரு மாதத்திற்கு பின்னர் சீசன் துவங்கியது . கடந்த ஒரு வார காலமாக குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 5வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலையில் குற்றாலத்தில் சாரல் திருவிழா துவங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)

தூத்துக்குடியில் விதிகளை மீறும் கனரக வாகனங்கள்; போக்குவரத்து நெரிசல் - மாணவர்கள், பொதுமக்கள் அவதி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:14:18 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)
